கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக, உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி, சேந்தமங்கலம், திம்மிரெட்டி பாளையம் ஆகிய கிராமங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷ்ரவண்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கிட உத்தரவிட்டுள்ளது,அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 766 நியாயவிலைக் கடைகளின் வாயிலாக 4 லட்சத்து 31 ஆயிரத்து 988 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 77 குடும்பங்கள் உட்பட மொத்தம் 4 லட்சத்து 32 ஆயிரத்து 065 குடும்ப அட்டைதாரர்களுக்குபொங்கல் பரிசுத் தொகுப்புகளை கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது.
இப்பொங்கல் பரிசுத் தொகுப்புகளை பெறுவதற்கான கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி,செங்குறிச்சி கிராமத்தில் வீடு வீடாக டோக்கன் விநியோகிக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டு, இப்பணிகளை விரைந்து முடித்திடுமாறு கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பு வழங்கிட தமிழ்நாடுமுதலமைச்சர் அறிவுறுத்தலின்படி செங்கரும்பு கொள்முதல் செய்திட திருநாவலூர் ஒன்றியத்தில் உள்ள சேந்தமங்கலம் மற்றும் திம்மிரெட்டி பாளையம் கிராமங்களில் விவசாயிகளால்பயிரிடப்பட்டுள்ள செங்கரும்பு வயலினை ஆய்வு செய்து செங்கரும்பு அளவினை அரசு நிர்ணயித்துள்ளபடி கொள்முதல் செய்திட வேளாண்மைத்துறை அலுவலர் மற்றும்கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்வின்போது, வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி,இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் மீனா அருள், மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.