கள்ளக்குறிச்சியில் பகுதிநேர நியாயவிலைக்கடை கேட்டு கிராம பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  காத்திருப்பு போராட்டம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், திருநாவலூர் ஒன்றியத்தில் உள்ள உ.செல்லூர் கிராம தலித் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பகுதிநேர நியாயவிலைக்கடை கேட்டு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் கண்டுகொள்ளாத வட்ட  நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் பூமாலை, சிஐடியு மாவட்ட செயலாளர்  செந்தில்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், திருநாவலூர் ஒன்றிய செயலாளர் டி.எஸ்.மோகன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர், தொடர்ந்து போராட்டக்காரர்கள் போராட்ட களத்திலேயே சமையல் செய்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இப்போராட்டத்தில் சிபிஎம்  கிளை தலைவர்ஏழுமலை, செயலாளர்கள் வீரன், சுரேஷ், சக்கரவர்த்தி, சிவபெருமான்,  வி.தொ.ச. ஒன்றிய செயலாளர் ஆனந்தராஜ், ஒன்றிய தலைவர் ராஜீவ்காந்தி மற்றும் உ.செல்லூர் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 28 = 32