கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வாய்ப்பு வழங்க வேண்டி மாபெரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்பபோராட்டம் ஒன்றியத் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்றது, மாநிலத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு போராட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கஉரை ஆற்றினார், அப்பொழுது மாற்றுத்திறனாளிகள் 50% வேலை செய்தாலே முழு ஊதியம் வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு 15 நாட்களுக்குள் 100 நாள் வேலை திட்டத்திற்கான அடையாள நீலநிற அட்டை வழங்க வேண்டும், எக்காரணத்தைக் கொண்டும் அட்டை வழங்க மறுக்கவோ, வேலை வழங்க மறுக்கவோ கூடாது என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் அலுவலகம் கடந்த மே மாதம் 31-ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும் என தெரிவித்தார்.
இப்போராட்டத்தில் மாவட்டத் தலைவர் வேலு, செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் முத்துவேல், மாயகிருஷ்ணன் வைத்தியலிங்கம், கண்ணன், சாந்தி மற்றும் ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.