கள்ளக்குறிச்சியில் தீபாவளியை முன்னிட்டு நெசவாளர்களுக்கு உதவிடும் வகையில் கோ- ஆப்டெக்ஸ் விற்பனை ரூ.50 லட்சம் இலக்கு

தமிழக அரசின் தலைமை கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 87 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பாரம்பரியமான துணி இரகங்களை இந்திய முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர முக்கிய பங்களித்து வருகிறது, அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், வருகின்ற தீபாவளியை முன்னிட்டு, கள்ளக்குறிச்சியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு ரூ.50 இலட்சம் விற்பனை குறியீடாக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி விற்பனை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு  விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி  மற்றும் திருபுவனம் போன்ற ஊர்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள், கோவை  கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, துண்டு இரகங்கள், பருத்தி சட்டைகள், மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாக உற்பத்தி செய்யப்பட்டு. இந்த ஆண்டு கோ- ஆப்டெக்ஸ் தீபாவளி 2022 பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் கனவு நனவு திட்டத்தின்படி,

வாடிக்கையாளர்களின் மாதந்தோறும் ரூ.300 முதல் ரூ.5000 வரை 10 மாத தவணைகள்  மட்டும் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்டு 11 மற்றும் 12 வது மாதத் தவணையில் நிறுவனம் செலுத்துவதுடன் கூடுதல் சேமிப்புடன் பருத்தி மற்றும் பட்டு இரக துணிகளை வாங்கி பயன்பெறலாம். தீபாவளி சிறப்பு தள்ளுபடி 30 சதவீத வசதியுடன் அரசு  ஊழியர்களுக்கு தவணை முறை கடன் விற்பனை வசதியும் உண்டு. எனவே அனைத்து துறை அரசு பணியாளர்களும், பொதுமக்களும் கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்திடும் வகையில் உதவிட கோ-ஆப்டெக்ஸில் 30 சதவிகித தீபாவளி சிறப்பு விற்பனையை வாங்கி பயன்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 3