கள்ளக்குறிச்சியில் சுகாதார சமத்துவ பொங்கல் விழா – மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் சின்னசேலம் வட்டத்திற்கு உட்பட்ட அம்மையகரம் கிராம சமத்துவபுரத்தில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் சுகாதார மற்றும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது, மாவட்டத்தில் உள்ள 412 கிராம ஊராட்சிகளிலும் மற்றும் சமத்துவ புரத்திலும் சுகாதார மற்றும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது, உலகெங்கும் வாழும் தமிழர்கள் உழவுத் தொழில் போற்றும் விதமாக தை முதல் நாளில் பொங்கல் வைத்து பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர், அதன்படி இன்று  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் அம்மையதளம் கிராமத்தில் உள்ள சமத்துவ புறத்திலும் பொதுமக்கள் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பொங்கலிட்டு சுகாதார சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொங்கல் விழா கொண்டாடும் விதமாக பொதுமக்கள் அரசு அலுவலர்கள் பணியாளர்களுக்கு பேச்சுப்போட்டி, கோலப்போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்ய நாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், மற்றும் அரசு அலுவலர்கள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

41 − 39 =