கள்ளக்குறிச்சியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களை அருகிலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கலாம்: கலெக்டர் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் கோரிக்கை மனுக்களை அருகிலுள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் வழங்கி பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் திங்கள் கிழமைகளில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு நேரில் வந்துகோரிக்கை மனுக்களை அளிப்பதற்காக பல்வேறு இடங்களிலிருந்து சிரமப்பட்டு பயணம் செய்துவருகை புரிகிறார்கள். எனவே மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி கள்ளக்குறிச்சி மாவட்டஆட்சியர் அலுவலகம் வருவதை தவிர்த்து மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையானஅரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் கோரிக்கை மனுக்களை தாங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் வழங்கினால் அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்று தேவையான நடவடிக்கைமேற்கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க சிறப்பு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான உதவி உபகரணங்கள், இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், செயற்கைஅவயம், சக்கர நாற்காலி, காதொலி கருவி, செல்போன், வங்கி கடன், மாதாந்திர உதவித்தொகை மற்றும் இதர உதவிகள் கோரும் மனுக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் விண்ணப்பித்து பயனடையலாம். அனைத்துஉதவிகளுக்கும் வருமான சான்று தேவையில்லை. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் அரசு நலத்திட்ட உதவிகள் கோரும் விண்ணப்பங்கள் மற்றும் அனைத்து விதமான கோரிக்கை மனுக்களையும் பெறுவதற்கு சிறப்பு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + = 14