கள்ளக்குறிச்சியில் இரண்டுசக்கரவாகனங்கள் நேருக்குநேர் மோதியதில் 2 பேர்பலி – புத்தாண்டுதினத்தில் சோகத்தில் மூழ்கிய இரண்டுகிராமங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம், எடைக்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நொனையவாடி கிராமம் அருகே இரண்டு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர், இரண்டு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உத்திரவேல்

இத்தகவலறிந்த எடைக்கல் காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். பலத்த காயம் அடைந்த இருவருக்கும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர்  இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில்  நொனையவாடி கிராமத்தை சேர்ந்த ராஜாங்கம் மகன் உத்திரவேல் (45), மற்றும் பு.மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் வீரமணி (30), ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர் என்பதும், இதில் வீரமணியின் மனைவி சுப்புலட்சுமி (28), உத்திரவேலுவின் தங்கை மகன் தருண் (12), ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என்பதும் தெரிய வந்ததுள்ளது, மேலும்  பலியான இருவரும் அருகருகே உள்ள இரண்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 6 = 1