கள்ளக்குறிச்சியில்  இந்தியன் வங்கி சார்பில் புதிய மகளிர் சுயஉதவிக்குழு சிறப்பு கிளையினை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்களம் ஏ.கே.டி. பள்ளி அருகே இந்தியன் வங்கி மகளிர்சுயஉதவிக்குழு சிறப்பு கிளையினை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிர் அனைவரும் பயன்பெறும் வகையில் இந்தியன் வங்கிசார்பில் புதிய மகளிர் சுயஉதவிக்குழு சிறப்பு கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிரும் தங்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றிக்கொள்ள அடிப்படையாக வங்கிக்கடன் மற்றும் சுய உதவிக்குழுக் கடன்களை பெற்றுபயனடைய வேண்டும். மேலும், பயனாளிகள் தவறாமல் அனைத்து தவணைகளையும் செலுத்தி, அதிகபட்ச கடன்களை வங்கியிடமிருந்து பெற்று பயனடைய வேண்டும்.மேலும், அடுத்த நிதியாண்டில் வணிக ரீதியில் வங்கி மேலாளர்கள் அதிகளவிலான கடன்களை மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வழங்க முன்வர வேண்டும், அனைத்து மகளிரும்குழுவாக ஒன்றிணைந்து கூட்டு தொழில்களை செய்து மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் தங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழிவகுத்துக் கொள்ள வேண்டும். மேலும், இவ்வங்கியில் மகளிருக்கென்றே பிரத்யேகமாக தாய்ப்பால் ஊட்டும் அறை வடிவமைக்கப்பட்டுள்ளது, பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய கிளைகளை உருவாக்கி வரும் இந்தியன் வங்கிக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் அரசின் சார்பாக அளிக்கும் அனைத்து கடன் திட்டங்களையும் பெற்றுபயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார், பின்னர் 45 மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4.50 கோடி மதிப்பிலான வங்கிக்கடனுக்கான காசோலையினைமாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மணி, தமிழ்நாடுஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர்  தேவநாதன், முன்னோடி வங்கி மேலாளர்முனீஸ்வரன், இந்தியன் வங்கி பொது மேலாளர் இராஜேஸ்வரரெட்டி, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கௌரிசங்கர் ராவ், இந்தியன் வங்கி துணை பொது மேலாளர்சுதர்சனன் மற்றும் அனைத்து இந்தியன் வங்கி கிளை ஊழியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − 5 =