கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு ஊரகவாழ்வாதார இயக்கம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு காணொளி காட்சி வாயிலாக சுய உதவி குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு வங்கி கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது .
தமிழக முதலமைச்சர் திருச்சியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 329 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் ரூபாய் 12.20 கோடிமதிப்பீட்டிலும், 87 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு பெருங்கடன் ரூபாய் 82.06 கோடிமதிப்பீட்டில், 416 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 94.26 கோடி மதிப்பீட்டில்கடனுதவிகளை வழங்கியதை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர்ஷ்ரவண்குமார், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன்,ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம்கார்த்திகேயன், உளுந்தூர்பேட்டை சட்டமன்றஉறுப்பினர் மணிக்கண்ணன் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணண், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சுந்தராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, இந்தியன் வங்கி, துணை பொது மேலாளர்(கடலூர்) கௌரிசங்கர் ராவ், மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் முனீஸ்வரன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் சந்திரசேகரன், மற்றும் மகளிர் திட்ட அலுவலர்கள்ராஜா, நாராயணசாமி, ராஜேந்திரன், மாதேஸ்வரன், கார்த்திகேயன் அரசுஅலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் கலந்துக் கொண்டனர்.