கள்ளக்காதல் மோகத்தால் பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டு டூவீலரிலேயே கர்நாடகாவிற்கு பறந்த தாய் – லாவகமாக அள்ளிக் கொண்டு வந்த புதுக்கோட்டை டிஎஸ்பி

பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு கள்ளக்காதலன் மீது கொண்ட மோகத்தின் காரணமாக அவருடன் டூவீலரிலேயே அண்டை மாநிலம் சென்று குடும்பம் நடத்திய பெண்ணை புதுக்கோட்டை டிஎஸ்பி லாவகமாக பிடித்து வந்து கணவருடன் ஒப்படைத்த சம்பவம் நடந்தேறி உள்ளது.

புதுக்கோட்டை டவுன் பேராங்குளத்தில் வசித்து வருபவர் அப்துல் காதர் வயது (62) ,அவர் மகன் ராஜா என்ற அப்துல்லா வயது (37) இவரின் மனைவி ரிஸ்வானா பேகம் வயது (24) , ராஜா என்ற அப்துல்லாவிற்கும் ரிஸ்வானாவிற்கும் 4 வயதில் ஆண் குழந்தையும் 6 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர், ராஜா டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் ரிஸ்வானாவிற்கும் கந்தர்வக்கோட்டையைச் சேர்ந்த பைசல் என்பவரின் மகன் பீர்முகமது வயது (28) இருவருக்கும் நீண்ட நாட்களாக தொடர்பு இருந்து வந்துள்ளது இவர்கள் இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி டூவீலரிலேயே அண்டை மாநிலமான கர்நாடகாவிற்கு சென்றுவிட்டனர்.

இவர்களை கண்டுபிடித்து தருமாறு அன்றைய தேதியிலேயே அப்துல் காதர் கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் முடிந்த அளவு விசாரித்துவிட்டு மனுவை கிடப்பில் போட்டுள்ளனர் என்ன செய்வது என்று அறியாமல் தெரியாமல் இரண்டு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு அப்துல் காதரும் பிள்ளைகளின் தந்தை ராஜாவும் தவித்து வந்துள்ளனர். இதற்கிடையில் புதுக்கோட்டை டிஎஸ்பியாக ராகவி ஜூலை 27ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவரை அணுகிய அப்துல் காதர் தன்னுடைய குடும்ப சூழல் குறித்து மனுவை கண்ணீருடன் அளித்துள்ளார். தாம் நடவடிக்கை எடுப்பதாக கூறிய டிஎஸ்பி ராகவி சொல்லை செயலில் காட்டும் விதமாக களத்தில் இறங்கி விசாரணை மேற்கொண்ட போது வீட்டை விட்டு ஓடிய இருவரும் தாங்கள் பயன்படுத்தி வந்த செல்போன் எண்களை பயன்படுத்தாமல் இருந்து வந்தது கண்டறியப்பட்டது அதே நேரத்தில் அவர்கள் அதே போனை மட்டுமே பயன்படுத்தி வந்திருப்பதும் தெரியவந்தது, இருவரும் பயன்படுத்திய போனின் அட்டை பாக்ஸ்களை வைத்து செல்போனில் ஐ.எம்.ஏ நம்பரை கண்டறிந்து அவர்கள் இருக்கும் திசை நோக்கி பார்த்த போது அவர்கள் கர்நாடக மாநிலம் கர்னூல் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருவது தெரிய வந்ததையடுத்து, கர்நாடகா போலீஸ் உதவியுடன் அங்கு சென்ற டிஎஸ்பி ராகவி தலைமையிலான தனிப்படை எஸ்.ஐ வீரமுத்து, காவலர்கள் திருப்பதி, கணேஷ் ஆகியோர் இதுவரையும் லாவகமாக பிடித்துக் கொண்டு புதுக்கோட்டை வந்து சேர்ந்தனர். இரண்டு குழந்தைகளையும் பரிதவிக்க விட்டுச்சென்ற ரிஸ்வானா, டிஎஸ்பி அலுவலகத்தில் இரண்டு குழந்தைகளையும் பார்த்து தனது தவறை உணர்ந்து இரண்டு பிள்ளைகளையும் கட்டி அணைத்துக் கொண்டு கதறி அழுதது காண்போரை நெகிழ வைத்தது, தவறை உணர்ந்து மனைவி வந்ததை மனமுவந்து கணவரும் ஏற்றுக் கொண்டார், மாமனாரும் ஏற்றுக்கொண்டார். அப்துல் காதரின் கண்ணீருக்கு செவி சாய்த்து தாம் டிஎஸ்பியாக பணியேற்று கொண்ட ஒரு மாத காலத்தில் ஆறு மாத காலத்திற்கு மேலாக கிடப்பில் கிடந்த பைலை தூசி தட்டி எடுத்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கும் டிஎஸ்பி ராகவியை அப்துல் காதர் குடும்பம் கையெடுத்து வணங்குகிறது அவர்களுடன் இணைந்து புதுகை வரலாறும் தமது பாராட்டுகளை தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 63 = 66