திருப்பூரில் கள்ளக்காதலால் ஏற்பட்ட தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் காலேஜ் ரோடு சலவைபட்டறை, ஜே.ஜே நகரில் கடந்த ஐந்து மாதங்களாக வசித்து வரும் தம்பதியர் குமார் – தனலட்சுமி. இவர்கள் சொந்த ஊரான தென்காசியில் இருந்தபோது, தனலட்சுமிக்கு காட்டுராஜா என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
இதையறிந்த குமார், தனலட்சுமியை கண்டித்துள்ளார். ஆனால், திருப்பூர் வந்த பிறகும், அந்த நபருடன் மொபைல் போனில் தனலட்சுமி பேசி வந்துள்ளார். இதையடுத்து இன்று அதிகாலை தம்பதியர் இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் பிரச்னையால் ஆத்திரமடைந்த குமார் அரிவாளால் தனலட்சுமியின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார்..
இதைத் தொடர்ந்து, வேலம்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் சரணடைந்த குமாரை, வேலம்பாளையம் போலீசார் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.