கல்வியியல் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக மீனாள் நியமனம்

தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக புதுக்கோட்டையை சேர்ந்த கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஒருவரை நியமித்து ஆளுநரின் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழக ஆளுநரின் துணைச் செயலாளரான பிரசன்னா ராமசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுக்கோட்டை, சிவபுரம் ஸ்ரீ மாணிக்கம் கல்வியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் மீனாள் முருகப்பனை கல்வியியல் பல்கலைக் கழக சிண்டிகேட் உறுப்பினராக நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர் மீனாள் முருகப்பன் புதுக்கோட்டையில் பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்தவர் அவருக்கு சொந்தமாக புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் அபிராமி ஹோட்டல் என்ற நிறுவனமும் சிவபுராத்தில் எம்ஆர்எம் சிபிஎஸ்சி மற்றும் கல்வியியல் கல்லூரி இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது எம்ஆர்எம் முருகப்பன் மனைவியான இவர் தற்பொழுது சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் இவரின் மாமனார் எம்ஆர்எம் மாணிக்கம் அரசு ஒப்பந்ததாரர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 84 = 85