இராமநாதபுரம் அரசு சேதுபதி கலைக்கல்லூரியில் மாணவமாணவிகள் சேர்க்கையில் அக்கல்லூரியின் முதல்வர் பால் கீரேஸ் அரசு விதிமுறைகளை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து அக்கல்லூரியில் பழைய மாணவ மாணவிகள் சங்கம் சார்பாக இராமகிருஷ்ணன் கல்வி ஆர்வளளர் அசிஸ் பாய் சமூக ஆர்வளர் மற்றும் புத்தேந்தல் கண்ணன் ,அழகர்சாமி ஆகியோர் அக்கல்லூரியின் முதல்வர் பால் கிரேஸ் அவர்களை சந்தித்து மாணவர் சேர்க்கை பற்றி விவத்தினர் பின்னர் மாணவர் ,மாணவிகள் சேர்க்கை பற்றிய மனுவையும் அவரிடம் கொடுத்தனர்.
பின்னர் பழைய மாணவ, மாணவியர் சங்க கல்வி ஆர்வளர், இராமகிருஷ்ணன் கூறிய போது இராமநாதபுரம் அரசு கலை கல்லூரியில் படித்த மாணவர் என்ற முறையில் நான் கூறுவது என்னவென்றால் ஆண்டு ஆண்டுகாலமாக இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் என்ன நடைமுறையில் உள்ளதோ அதை கல்லூரியின் முதல்வர் பின்பற்றாமல் மாணவர் சேர்க்கையில் குளர்படி செய்கிறார்.
குறிப்பாக தமிழ் வழி கல்விக்கு மாணவர் சேர்க்கை 29 -ம் , ஆங்கில வழி கல்விக்கு மாணவர் சோக்கை 29-ம் ஆக மொத்தம் 58 இடங்கள் அரசு உத்தரவின் உள்ளது. ஆனால் முதல்வரோ ஒரு துறைக்கு 20 ூ 20 என்று மாணவர் சேர்க்கையே குறைத்து ஏழை எளிய மாணவர்களின் கல்வியே வளர்ச்சியை தடுக்கிறார். குறிப்பாக இக்கல்லூரியின் அனைத்து சமுதாய மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இவர் மாணவ,மாணவியர் சேர்க்கையில் குறைப்பதால் 172 இடங்கள் வீனாகபோகிறது.
மேலும் இக்கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியர்களிடமும் ஆசிரியர்களிடமும் நீங்கள் என்ன சாதி என்று கேக்கிறார்.
இதனால் மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர் மிகுந்த மன
உழைச்சலில் உள்ளனர். மேலும் இக்கல்லூரியில் செயல் படும் உணவு விடுதியில் தான் தேநீர் அறுந்துவதற்கு தனி குவளையை பயன்படுத்தி வருகிறார். இதனால் மாணவ,மாணவியர் மத்தியிலும்ஆசிரியர் மத்தியிலும் ஒரு விதமான பதற்ற சூழ்நிலை உறுவகி உள்ளது.
ஆகவே அரசும் இத்துறை சார்ந்த அதிகரியும் இப்பிரச்சனையில் தலையிட்டு கல்லூரி முதல்வர் பால் கிரேஸ் அவர்களை உடனடியாக மாற்ற வேண்டும் . இல்லையென்றால் மக்களையும் ,மாணவ,மாணவியர்களையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை தொடர்வோம் என்று கூறினார்.