கல்குவாரி விபத்தில் 11 தொழிலாளர்கள் பலி: மிசோரமில் சோகம்!

மிசோரமில் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 11 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் ஒருவரை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

மிசோரமில் நத்தியால் மாவட்டத்தில் மவ்தார் கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த குவாரியில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென குவாரியில் கற்கள் அதிகளவில் சரிந்து விழுந்துள்ளன. இச்சம்பவத்தில் 12 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து எல்லை பாதுகாப்பு படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். அவர்களை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்று காலை அந்த பகுதிக்கு சென்று மீட்பு பணியை தொடங்கினர். இரண்டு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய அந்த குழு விபத்தில் சிக்கி உயிரிழந்த 8 தொழிலாளர்களின் உடல்களை நேற்று மீட்டனர்.

எனினும், மீதமுள்ள 4 தொழிலாளர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடந்த மீட்பு பணியில் மீதமுள்ள 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், ஒருவரை தேடும் பணி நீடிப்பதாக கூடுதல் துணை ஆணையாளர் சாய்ஜிக்புய் தெரிவித்துள்ளார். இவ்விபத்து சம்பவம் மிசோரம் மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 5 =