
கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது பெற்ற, அரியலூர் தமிழ் பண்பாட்டு பேரமைப்பு செயலாளர் ராமசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட தமிழ் பண்பாட்டு பேரமைப்பு செயலாளரும், செம்மொழித் தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் பொறுப்பு அலுவலருமான, முனைவர் க.ராமசாமிக்கு, விருது வழங்கும் விழா சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி செம்மொழி விருது-2023, மற்றும் ரொக்க பரிசு உள்ளிட்டவற்றை, பேராசிரியர் ராமசாமிக்கு வழங்கி பாராட்டினார்.
இதையடுத்து, கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது பெற்ற பேராசிரியர் ராமசாமிக்கு பாராட்டு விழா, சென்னை -மேடவாக்கம், நம்ம வீடு வசந்த பவன் ஹோட்டலில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட தமிழ் பண்பாட்டு பேரமைப்பு தலைவர் சீனி பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், பலரும் பேராசிரியர் ராமசாமிக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து தமிழ் பண்பாட்டு பேரமைப்பு சார்பில் வாழ்த்து கேடயம் வழங்கப்பட்டது.
விழாவில் புலவர் சம்பந்த மூர்த்தி, தமிழ் பண்பாட்டு பேரமைப்பு நிர்வாகிகள், நல்லப்பன் ஆசிரியர், புலவர் சி.இளங்கோ, ஜோதி ராமலிங்கம், முனைவர் கொ.வி. புகழேந்தி, சித்த மருத்துவர் வேலுசாமி, அ.நல்லப்பன், ராவணன், அரங்கநாடன், பாரிவள்ளல், சிவக்கொழுந்து, சௌந்தரராஜன் ஆசிரியர், முனைவர் க.சின்னதுரை, செல்லபாண்டியன், செவ்வேள் மணிவேல், இளவரசன், திருச்சி ராஜேந்திரன், திமுக செந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் எழில் மாறன் மற்றும் பேராசிரியர் க ராமசாமி குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.