கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் ‌குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

இராமநாதபுரம் மாவட்டம், போகலூர் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகவை  விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் சார்பாக முத்துச்செல்லாபுரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. 

இப்பயிற்சியில் சத்திரக்குடி வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) பானு பிரகாஷ் வரவேற்புரை வழங்கினார். மேலும் டாம் பி சைலஸ், வேளாண்மை இணை இயக்குநர் அவர்கள் இயற்கை உரம், நுண்ணுயிர் உரம், இரசாயன உரம், பசுந்தாள் உரம் மற்றும் துத்தநாக சல்பேட் இடுதல் பற்றி கூறினார். நாகராஜன் வேளாண்மை உதவி இயக்குநர் தரக்கட்டுப்பாடு அவர்கள் உரங்களின் பயன்பாடு, மானிய விபரம் மற்றும் உரங்களை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்தலாம் என்பதை பற்றி கூறினார். மீன்வளத்துறை துணை ஆய்வாளர் சாகுல் பண்ணைக் குட்டையில் மீன்கள் வளர்ப்பு குறித்து கூறினார். உதவி தொழில்நுட்ப ‌மேலாளர் திருமதி ‌மெய்விழி உயிர் உரங்கள் மூலம் விதை நேர்த்தி செய்து காட்டினார்.

இப்பயிற்சியில் உலகு சுந்தரம், வேளாண் அலுவலர், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் இளையராஜா சிறப்பாக செய்திருந்தார். துணை வேளாண்மை அலுவலர் க.சக்திவேலு நெல் நுண்ணூட்ட கலவை பயன்பாடு பற்றி எடுத்துக்கூறி, பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 3 =