கறம்பக்குடி வட்டார வளமையத்தில் சமத்துவ பொங்கல் விழா

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டார வளமையத்தில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு தனியார் நிறுவனங்கள் அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் முன்கூட்டியே சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம். கறம்பக்குடி வட்டார வளமையத்தில் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் மேற்பார்வையாளர் ராஜலிங்கம், ஆசிரியர் பயிற்றுனர்கள் கோகுலகிருஷ்ணன், குமாரசாமி, ஸ்டெல்லா, செல்லத்துரை, சிறப்பாசிரியர்கள் ஜான்சி ராணி, பெல்சியா, கலைச்செல்வி, கோவிந்தம்மாள், இயன்முறை மருத்துவர் கருணாநிதி, கணக்காளர்கள் செல்வமணி, குணவதி, லதா, கணினி விவரப்பதிவாளர் அந்தோணி, லூயிஸ்மேரி, பள்ளி ஆயத்த பயிற்சி மைய ஆசிரியை அமரஜோதி, சமையலர் சீரங்கம் மற்றும் அருகாமையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

37 − = 35