கறம்பக்குடி வட்டாரத்தில் பொங்கல் பானை மற்றும் அடுப்புகள் அதிக அளவில் உற்பத்திசெய்யப்பட்டு விற்பனை நடைபெற்று வருகின்றது

அறுவடை திருநாள் என்று தமிழர் போற்றும் பொங்கல் பண்டிகை, கிராமப்புறங்களில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.”எட்டுதிக்கும் தித்திக்கும்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மண்பானையில் பொங்கல் வைத்து, வழிபடுவது தமிழர் பண்பாடு.வேளாண்மையை குலத்தொழிலாக கொண்ட குடும்பத்தினர், பொங்கல் திருநாளில் பழங்கால முறைப்படி, மண்பானையில் வைக்கும் பொங்கலுக்கு இருக்கும் சுவையே அதன் சிறப்பு.

முக்கியப்பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை சமயத்தில், மண்பானைகளில் பொங்கல் செய்து, சூரியபகவானை வழிபடும் வழக்கம் நம் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14-ம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந் நாளில் அதிகாலையில் புத்தாடை அணிந்து.மண்பானையில், பொங்கல் வைத்து, சூரியபகவானை வழிபடுவது, தமிழர் பண்பாடாக இருக்கிறது. பொங்கல் பண்டிகையின் முக்கிய அம்சமாக, பொங்கல் பானை எனப்படும்  மண்பாண்டம் இடம்பெறுகிறது. .கிராமங்களில், பானை உள்ளிட்ட புதிய மண்பாண்டங்கள் தயாரிக்கப்பட்டு, நகர்ப்புறங்களில் விற்பனைக்கு வருவது வழக்கமாக உள்ளது

கறம்பக்குடி ஒன்றியம், நரங்கியபட்டு கிராமத்தில்  40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் மண்பாண்ட தொழில் செய்து வருகின்றனர். மண்பாண்ட தொழிலாளர்கள் அனைவரும் ஹரிஷ்மாலை  அறக்கட்டளை  மூலம் தமிழக அரசால் வழங்கப்பட்ட மின்திருவையை பயன்படுத்தி அதிக அளவில் மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி செய்து வருகிறார்கள். தற்போது பொங்கல் நெருங்கி வரும் நிலையில், பொங்கல் பானைகள் தயார் செய்வதில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் இங்கே மண் பானைகள், பூந்தோட்டிகள், அடுப்புகள், சட்டிகள், விளக்குகள் என பல்வேறு கலைப் பொருட்களைத் தயாரிக்கின்றனர். பொங்கல்  திருநாள் நெருங்குவதால், அதற்காக, பொங்கல் பானைகள், அடுப்புகள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்  செல்வி  கூறுகையில்:மண் பானை தயாரிப்பு பணியில். மண் பதப்படுத்துதல், பானை செய்தல் பணிகளில் ஆண்களும், பானைக்கு வண்ணமிடும் பணியில் மகளிரும் ஈடுபட்டு வருகிறோம். இந்த ஆண்டு மின் திருவையை பயன்படுத்தி பொங்கல் பானைகள் மற்றும் அடுப்புகள் அதிக அளவில் உற்பத்தி செய்து மொத்த வியாபாரிகளுக்கும் சிறு வியாபாரிகளுக்கும் விற்பனை செய்து வருகிறோம். இந்த ஆண்டு பொங்கல் எங்களுக்கு மிகவும் நன்றாக அமைந்துள்ளதுமண்பாண்ட தொழிலாளர் சித்திரவள்ளி கூறுகையில்: நாகரிக வளர்ச்சியால், மண்பாண்டங்களின் பயன்பாடு குறைந்தாலும், பொங்கல் விற்பனைக்காக, கிராமங்களில் அவற்றை தயாரிக்கும் பணி, உற்சாகமாக நடந்து வருகிறது இன்று நாகரிக காலத்தில் பலரும் குக்கர் பொங்கலுக்கு மாறிவிட்ட நிலையில் மண்பானையில் பொங்கல் வைக்கும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தமிழக அரசால் வழங்கப்பட்ட மின்திருவை எங்களது குடும்பத்தினருக்கு மிகுந்த பயனளித்துள்ளது . தற்போதுபொங்கல் பண்டிகையை முன்னிட்டு  உற்பத்தி  செய்த பொங்கல் பானைகள் அனைத்தும் மொத்த வியாபாரிக்கு விற்பனை செய்ய இருக்கின்றோம் என தெரிவித்தார்

மண்பாண்டதொழிலாளர் ராமசாமி  கூறுகையில், தமிழக கிராமங்களில் வசிக்கும் மக்களிடையே மண்பானை,  சட்டிகள் என்பதெல்லாம் அவர்களின் வாழ்வியலோடு கலந்த ஒன்றாகும். நாங்கள் பரம்பரை பரம்பரையாக மண்பாண்டங்களை செய்யும் தொழிலை செய்து வருகிறோம். இப்போது பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் வைப்பதற்கான மண்பானை விற்பனை அதிகம் இருக்கும். அதற்காக இப்போது இந்த பொங்கல் மண்பானைகளை தயாரித்து வருகிறோம். ஹரிஷ்மாலை  அறக்கட்டளை மூலம் தமிழக அரசால் வழங்கப்பட்ட சுழலும் சக்கரத்தின் மூலம் பானையை உருவாக்கி அதன் பிறகு கீழ்பகுதியை கைகளால் அடைத்து பானைக்கு முழு உருவம் கொடுக்கிறோம். அந்த பானை நன்றாக காய்ந்த பிறகு அதற்கு கலர் கொடுத்து விற்பனை செய்கிறோம். பாரம்பரியத்தை கடைபிடிக்கும் உணர்வு இருக்கும் வரை மண்பானைகள் பயன்பாடும் இருக்கும்.  இந்த ஆண்டு அதிக அளவில் மொத்த  விற்பனைக்கு விற்பனை செய்து வருகிறோம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் நேரடி விற்பனையும் செய்ய  உள்ளோம்  என தெரிவித்தார்.மண்பாண்டதொழிலாளர் பாலுசாமி  கூறுகையில்: பழங்கால நடைமுறைகள் ஒவ்வொன்றாக மாறிக்கொண்டே வந்தாலும், மண்பானையில் பொங்கல் வைக்கும் வழக்கம் மட்டும் நாளுக்கு நாள் தமிழர்களிடையே அதிகரித்து வருகிறது.முந்தைய காலத்தில் இருந்து சக்கரத்தை கையில் சுற்றி பானை செய்த தொழிலாளர், இப்போது மின் மோட்டார் பொருத்தி, சக்கரம் மூலம் செய்கின்றனர். எங்களுக்கு ஹரிஷ்மாலை  அறக்கட்டளை மூலம் தமிழக அரசால் வழங்கப்பட்ட  மின் மோட்டார் பொருத்திய, சக்கரம் மூலம்   பொங்கல் பானைகள் உற்பத்தி செய்து மொத்த வியாபாரிக்கு விற்பனை செய்ய இருக்கின்றோம் என தெரிவித்தார்

மண்பாண்ட வியாபாரி   சகுந்தலா கூறுகையில்:  நான்  கறம்பக்குடி சந்தை பகுதியில் மண்பாண்ட  பொருட்களை  விற்பனை செய்து வருகிறேன், தமிழக அரசால் வழங்கப்பட்ட  மின் திருவை பயன்படுத்தி  உற்பத்தி செய்த பொங்கல் பானை மற்றும் அடுப்பு ஆகியவற்றை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருகிறேன் . பொங்கல் விற்பனை எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது. பொங்கலுக்கு இன்னும் சில நாட்கள் உள்ளதால் விற்பனை மேலும் அதிகரிக்கும்  என கூறினார்மேலும் மின்திருவை பெற்ற  கனகா,பெரியசாமி,தனபால் ,ராணி ,பால்சாமி ,மற்றும் பல மண்பாண்ட தொழிலாளர்கள் அனைவரும் பொங்கல் பானை உற்பத்தி மற்றும் விற்பனை அதிக அளவில் இருக்கும் எனவும் , எங்களிடத்தில் ஹரிஷ்மாலை  அறக்கட்டளை மூலம் தமிழக அரசால்புதுக்கோட்டை மாவட்டநிர்வாகத்தின் சார்பில்   வழங்கப்பட்ட மின்திருவை இருப்பதால் அதிகளவில் மண்பாண்ட  பொருட்கள்  உற்பத்தி  செய்து  உடனடியாக விற்பனைக்கு  கொண்டு வர முடிகிறது எனவும் மேலும்   பொங்கல் பானை மற்றும் அடுப்பு  விற்பனை  அதிகரித்துள்ளது  எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது  என்றும்  கூறினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 1 =