கறம்பக்குடி பஸ் ஸ்டாண்டு கடைகள் 4 ஆண்டுக்கு பின் ஏலம்!

கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் கட்டப்பட்டு நான்கு ஆண்டாகியும் திறக்கப்படாத நிலையில் பேருந்து நிலையத்தில் உள்ள 16 கடைகள் பேரூராட்சி அலுவலகத்தில் ஏலம் விடப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் கட்டப்பட்டு 4 ஆண்டான நிலையில் திறக்கப்படாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுதொடர்பாக அரசுக்கு மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விரைவில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தை திறக்க கோரிக்கை வைத்தனர்.

மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப நேற்று முன்தினம் பேருந்து நிலையத்தில் உள்ள 16 கடைகள் பேரூராட்சி அலுவலகத்தில் ஏலம் விடப்பட்டன. ஏலதாரர்கள் டோக்கன் அடிப்படையில் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஏலம் அரசால் நிர்ணயிக்கப்பட்ட ரூ.3, ஆயிரம் வாடகைக்கு குறையாமல் உச்சபட்ச ஏலத்தொகையான ரூ.10 ஆயிரம் வரை ஏலம் விடப்பட்டன.

ஏலத்தில் கறம்பக்குடி வட்டாட்சியர் ராமசாமி, பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், பேரூராட்சி தலைவர் முருகேசன், வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் பல அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 1