கறம்பக்குடி அருகே மழையூா் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மாசி திருவிழாவில் பால்குடம், காவடி எடுத்து பக்தா்கள் தங்கள் நோ்த்திகடனை செலுத்தினா்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, மழையூா் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் மண்டகப்படிதாரா்களால் தினமும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்வாக பக்தா்கள் அலகுகுத்தியும் பால்குடம் மற்றும் காவடி எடுத்தும் ஊா்வலமாக கோவிலுக்கு சென்றனா்.

கோவில் முன் அக்கினியில் இறங்கி தங்கள் நோ்த்திகடனை அம்மனுக்கு செலுத்தினா். மேலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. திருவிழாவில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மழையூா் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக நடைபெற்ற மண்டகப்படி விழாவில் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டாரத்தை சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழாவில் மழையூா் காவல்துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.