கறம்பக்குடி அருகே பெயா் பலகைகளை தொடா்ந்து சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலைமறியல் போராட்டம்

கறம்பக்குடி அருகே உள்ள புதுவளசல் கிராமத்தில் அம்பேத்கர் படம் இடம் பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பெயர் பலகையையும் தனியார் கல்வி வளர்ச்சி கழக உறுப்பினர்களின் பெயர் பலகையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியையும் கிழித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் புதுப்பட்டி ஆலங்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை கறம்பக்குடி அருகே புதுவளசல் கிராமத்தில் அம்பேத்கர் படத்துடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி பெயர் பலகை மற்றும் தனியார் கல்வி வளர்ச்சி கழக உறுப்பினர்களின் பெயர் பலகையையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியும் இருந்துள்ளது. இந்நிலையில் அம்பேத்கர் படம் இடம் பெற்ற இந்த இரண்டு பெயர் பலகையையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியையும் மர்ம நபர்கள் கிழித்துச் சென்றுள்ளனர். இதனை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் புதுப்பட்டி-ஆலங்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதே போன்று கடந்த மாதம் 27ம் தேதி மர்ம நபர்கள் இதே இடத்தில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பெயர் பலகை தனியார் கல்வி வளர்ச்சிக் கழக பெயர் பலகையை சேதபடுத்தியதை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இது போன்ற சம்பவம் அப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இதற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக அந்த பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கறம்பக்குடி வட்டாட்சியர் இராமசாமி மற்றும் காவல் துறையினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதியளித்தனர், அதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 3