கறம்பக்குடி அருகே கிராவல் மண் கடத்திய 7 வாகனங்கள் பறிமுதல்,4 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே  மழையூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலங்கள், குளங்கள் மற்றும் தனியார் இடங்களில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளி கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. எனவே அந்தப் பகுதிகளில் சோதனைகள் நடத்தும்படி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் மழையூர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.இதன்பேரில் மழையூர் காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் காவல்துறையினர் கறம்பக்குடி-மழையூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக சென்ற இரண்டு டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் மழையூர் முனீஸ்வரர் கோவில் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் இருந்து கிராவல் மண்  எடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று சோதனை செய்த போது அங்கே மேலும் இரண்டு டிப்பர் லாரிகள், பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளிக் கொண்டு இருந்தனர்.ஒரு டிராக்டர் அந்தப் பகுதியில் இருந்தது. இதனைத் தொடர்ந்து கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரிகள், மண் அள்ள பயன்படுத்திய 2 பொக்லைன் இயந்திரம் மற்றும் டிராக்டர் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இளையராஜா(வயது 21), பாக்யராஜ் (வயது 30), ஸ்ரீதர்( வயது25), இளவரசன் வயது( வயது 21) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் ஆடகுட்டி,கணேசன், குணசீலன் ஆகிய 3போ் மீதும் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 6 =