கறம்பக்குடி அருகே அரசுப் பள்ளியில் அதிக சத்து மாத்திரைகளை உட்கொண்ட மாணவன் மருத்துவமனையில் அனுமதி

கறம்பக்குடி அருகே அரசு தொடக்கப்பள்ளி மாணவன் சத்து மாத்திரையை மிட்டாய் என நினைத்து அதிகமாக சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள ராங்கியன் விடுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மகன் ரூபன்(6). இவர் அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதிய இடைவேளையின் போது பள்ளி மேஜையில் இருந்த இரும்புச் சத்து மாத்திரைகளை மிட்டாய் என நினைத்து 10 மாத்திரைகளை தின்றதாக கூறப்படுகிறது. மாலையில் வீடு திருந்திய ரூபனுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவன் ரூபன் சிகிச்சை பெற்று வருகின்றான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

77 + = 80