கறம்பக்குடி அருகே அம்புக்கோவில் அரசு உயர்நிலைப் பள்ளியில் சர்வதேச ஓசோன் விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அம்புக்கோவில் அரசு உயர்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 16 சர்வதேச ஓசோன் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு பள்ளியின் சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பு ஆசிரியர் நவநீத கண்ணன் மற்றும் சுற்றுச்சூழல் மன்ற உறுப்பினர்களால் கடைபிடிக்கப்பட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் துரை குமரன் தலைமையிலும் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் முத்துக்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அம்புக்கோவில் ஊராட்சி மன்ற தலைவர் கா. சுமன் பங்கேற்று விழாவினை சிறப்பித்தார். இவ்விழாவில் முக்கிய நோக்கமான ஓசோன் படலம் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த கலை நிகழ்ச்சிகள், நாடகம், பேச்சுப்போட்டி, பாட்டு போட்டி, கவிதை போட்டி போன்றவை நடத்தப்பட்டன. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிக்கு அருகில் சாலை ஓரத்தில் மனித சங்கிலி மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் மூலம் பேரணி நிகழ்வுகள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில்  பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

95 − = 91