புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்களை நியமிக்க மனிதநேய ஜனநாயக கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மஜக மாவட்டசெயலாளா் முகமது ஜான் விடுத்துள்ள கோரிகையில், கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் தற்போது அவசர மற்றும் புறநோயாளிகள் அதிகளவில் வருவகின்றனா். இதனால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவிவருகிறது. விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கு வருபவர்களால் போதிய மருத்துவர்கள் இல்லாததால் புறநோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே தமிழக அரசும், சுகாதாரத்துறையும் நோயாளிகளின் நலன்கருதி உடனடியாக கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை நியமித்து விபத்து, அவசர சிகிச்சை, பிரசவம், புறநோயாளிகள், கொரோனா தடுப்பூசி தினசரி பெருமளவு செலுத்திக்கொள்ள இவை அனைத்திற்கும் மக்கள் தடையின்றி சிகிச்சை பெற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.