
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் சார்பில் கறம்பக்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் முஹம்மது ஜான் தலைமை வகித்தார். தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் முகமது மன்சூர் முன்னிலை வகித்தார். விவசாய அணி மாநில செயலாளர் பேரை அப்துல் சலாம் கண்டன உரையாற்றினார். ஆா்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ரஹிம் தாலிஃப், மாவட்ட துணை செயலாளர்கள் முகமது பிலால், லெட்சுமணன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சீனிவாசன், மார்க்ஸிஸ்டு லெனினிஸ்டு (ml) கட்சியின் பொருளாளர் விஜயன், விசிக பொறுப்பாளர்கள் சந்திரபாண்டியன், முருகேசன், மதிமுக நகர செயலாளர் கணேசன் மற்றும் மஜக ஒன்றிய செயலாளர் அப்துல்லா, பொருளாளர் சாகுல் ஹமீது, நகர பொருளாளர் ஜியாவுதீன், இளைஞரணி செயலாளர் பாப்புலர் ஹக்கீம், தொழில் சங்க செயலாளர் ராஜ்கபூர், நகர துணை செயலாளர் ரபியுதீன், நகர துணை இளைஞரனி செயலாளர் அர்ஷத், நகர மருத்துவ அணி துணை செயலாளர் சிராஜ்தீன் மற்றும் மஜக மாவட்ட, ஒன்றிய, நகர உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று கர்நாடக அரசுக்கு எதிரான கண்டன முழுக்கங்களை எழுப்பினர். முடிவில் மஜக நகர செயலாளர் ஆசை அப்துல்லா நன்றி கூறினார்.