கறம்பக்குடியில் அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கறம்பக்குடியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் 100 கும் மேற்பட்டோர் காலி பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தியும் அங்கன்வாடி மையங்களை இணைப்பு என்கிற பெயரில் மூடக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கறம்பக்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிகடை முக்கத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் அங்கன்வாடி ஒன்றிய பொறுப்பாளர் அற்புத மேரி, முன்னாள் ஒன்றிய பொறுப்பாளர் மாரியம்மாள், மாவட்ட பொருளாளர் ரஞ்சிதா ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், இணைப்பு என்கிற பெயரில் அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது,

1993 அங்கன்வாடி ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும், ஐந்தாண்டு பணி முடித்த குறுமைய ஊழியர்களுக்கும் 10 வருடம் பணி முடித்த உதவியாளர்களுக்கும் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும், அங்கன்வாடியில் அதிகமான பணி சுகாதாரத்துறை பணிகள் செய்யப்படுகின்றன.

அதனால் அங்கன்வாடி ஊழியர்களுக்கு 42 வயதில் வி.ஹெச்.என் பயிற்சி கொடுக்கப்பட்டு அவர்களுக்கு கிராமப்புற செவிலியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது தற்போது அதை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக அந்த பதவி உயர்வை வழங்கிட வேண்டும், மகப்பேறு விடுப்பு அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்குவது போல் ஒரு வருடம் வழங்க வேண்டும், குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்கள் மையத்தை நடத்த வட்டிக்கு கடன் வாங்கும் நிலையை உணர்ந்து அரசு முன் பணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மற்றும் அகில இந்திய அளவில் கருப்பு தினம் கடைபிடிக்கப்படுவது குறித்தும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது, இந்த ஆர்ப்பாட்டத்தில் 100கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் பங்கேற்றனர்.