சிக்கமகளூருவில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
கர்நாடகாவின் சிக்கமகளூரு மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு நடத்திய ரமேஷ் என்பவரை போலீசார் கைது செய்து துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.