புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக தலைவர் கரு ராஜேந்திரன் எழுதிய புதுக்கோட்டை மறவர் செப்பேடு நூல் வெளியீட்டு விழா சோழன் சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்விற்கு விவசாய சங்க தலைவர் ஜி.எஸ்.தனபதி, ஓய்வு பெற்ற திட்ட அலுவலர் ஏவிசிசி.கணேசன், விழுப்புரம் மாவட்ட வரலாற்று அறிஞர் வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மணிகண்டன் வரவேற்றார். நூலினை இந்திய தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற அலுவலர் வாசுதேவன், புதுக்கோட்டை அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி வெளியிட குழிபிறை பிஎல் சுந்தரம்,பழ.சண்முகம், தஞ்சாவூர் துரை சசிகுமார், வரலாற்று ஆய்வாளர் முனைவர் நந்தர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்வில் கொங்கு இளைஞர் பேரவை மாநில தலைவர் கார்வேந்தன், சிவகங்கை தொல்நடை குழுவின் தலைவர் காளிராஜா, தொல்லியல் ஆய்வு கழகத்தின் நிர்வாகிகள் மஸ்தான், பகுருதீன், பேராசிரியர் நீலாவதி,பேராசிரியர் கருப்பையா,தலைமையாசிரியர் குருமூர்த்தி, செய்தி தொடர்பாளர் அ. ரஹ்மத்துல்லா,புதுக்கோட்டை வரலாற்று பேரவையின் தலைவர் குசி தமிழரசன்,செயலாளர் மாரிமுத்து,இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்வின் முடிவில் தொல்லியல் ஆய்வு கழக துணை செயலர் பீர்முகமது நன்றி கூறினார்.
