கரும்பு விவசாயிகளுக்கு எந்திர சாகுபடி குறித்த ஆலோசனைக் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை ஆதனக்கோட்டை கோட்டத்தின் சார்பாக ஆலையின் தலைமை நிர்வாகி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி தலைமையில் வண்ணாரப்பட்டி கிராமத்தில் கரும்பு விவசாயிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

கோட்ட கரும்பு அலுவலர் மேலவாசல் வரவேற்புரையுடன் கூட்டம் தொடங்கியது, இக்கூட்டத்தில் கரும்பு சாகுபடியில் இயந்திரங்களின் தேவை மற்றும் பயன்பாடுகள் பற்றியும் அகல பார் முறையில் கரும்பு நடவு செய்வது தொடர்பாகவும் கரும்பு பெருக்க அலுவலர் ராமு விளக்கி கூறினார், கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னோடி விவசாயிகளுடன் தலைமை நிர்வாகி கரும்பு சாகுபடியில் , இயந்திரங்களை பயன்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடினார்,  கரும்பு சாகுபடியில் சொட்டுநீர் பாசனத்தின் தேவை மற்றும் நன்மைகளைப் பற்றி பிரீமியர் இர்ரிகேசன் நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் முத்துக்குமார் விளக்கி கூறினார்,  வண்ணாரப்பட்டி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த  நாற்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்,  கோட்ட கரும்பு பெருக்க உதவியாளர் முத்துசாமி நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுபெற்றது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 73 = 81