கருகிய சம்பா பயிர்களுக்கு இழப்பீட்டை அரசு உடனடியாக வழங்க தமாகா விவசாயஅணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் விவசாயஅணி தலைவர் துவார் சி.ரெங்கராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:
தமிழகத்தில் சம்பா சாகுபடி செய்து போதிய மழை இல்லாததால் சுமார் 30 ஆயிரம் செலவு செய்து அனைத்து பயிர்களும் கருகிவிட்டது. புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் இன்னும் சில மாவட்டங்களில் பல ஆயிரகணக்கான விவசாயிகளின் பயிர்கள் கருகிய சூழ்நிலையில் மறு சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீட்டை அறிவித்து உள்ள நிலையில் அதற்க்கு முன்பாக கருகிய பயிர்களுக்கு வேளாண்துறை அதிகாரிகள் மூலம் கணக்கெடுத்துள்ள நிலையில் தமிழக முதல்வர் அவர்களுக்கான இழப்பீட்டை வழங்கி விவசாயிகளின் நலனை காத்திட வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.