கரம்பக்குடி அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல் போலீசார் விசாரணை

கறம்பக்குடி அருகே அரசு பள்ளி ஆசிரியை பள்ளிக்குள் புகுந்து தாக்குதல் நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா கணியன் கொள்ளை அரசு தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் வடக்கு வானக்கன்காட்டை சேர்ந்த சித்ராதேவி

மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அதே கிராமத்தைச் சேர்ந்த சித்ராதேவியின் உறவினர் ஒருவர் சொத்து தகராறு காரணமாக ஆசிரியை மீது தாக்குதல் நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடகாடு போலீசார் பள்ளியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

34 − 29 =