காரைக்காலில் “நலிவடைந்தோர் தினவிழா” போக்குவரத்துத் துறை அமைச்சர் பங்கேற்பு

புதுவை அரசு காரைக்கால் மாவட்டத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டு வார விழாவாக கொண்டாடும் ஒரு பகுதியாக இன்று ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக, “நலிவடைந்தோர் தினவிழா” நிகழ்வு காரைக்கால் நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா  தலைமை வகித்தார். துணை ஆட்சியர் (வருவாய்) ஆதர்ஷ், சமூக நலத்துறை உதவி இயக்குனர் சத்யா, பள்ளி கல்வித்துறை துணை இயக்குனர் ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன், ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உதவி இயக்குநர் மதன்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், அரசுத்துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளின் பேராசிரியர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், ஆதிதிராவிடர் நல கூட்டமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு கோடியே, 50 லட்சம் மதிப்பில் ஸ்காலர்ஷிப் உள்ளிட்ட கல்வி உதவித் தொகையை மாணவர்களுக்கு அமைச்சர் சந்திர பிரியங்கா வழங்கி பேசியதாவது:

முதல்வர் ரங்கசாமி பதவியேற்றது முதல் பல்வேறு நலத்திட்ட உதவிகளை இந்த அரசு செய்து வருகிறது. புதுச்சேரியில் நிறைய கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், நிறைய பள்ளிகள் உள்ளன. மாணவர்களாகியநீங்கள் செய்வது ஒன்றே ஒன்றுதான் நன்கு படித்து தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − = 13