புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் வழிக்காட்டுதலின் படி,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி மைய உயர் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு ஐந்தாம் கட்ட பயிற்சி வட்டார வள மையம், அரசு மேல்நிலைப் பள்ளி கல்லாக்கோட்டை, அரசு உயர்நிலைப்பள்ளி குளத்தூர் நாயக்கர்பட்டி மற்றும் அரசு உயர் நிலைப் பள்ளி வேலாடிப்பட்டி ஆகிய இடங்களில் குறுவள மைய அளவிலான பயிற்சி நடைபெற்றது. கந்தர்வக்கோட்டை வட்டார வள மையத்தில் நடைபெற்ற உயர் தொடக்க நிலை தன்னார்வலருக்கான பயிற்சியை வட்டாரக் கல்வி அலுவலர் ஆ.வெங்கடேஸ்வரி தொடங்கி வைத்து பேசினார்,வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) கு.பிரகாஷ் ஒருங்கிணைத்தார், முன்னதாக ஆசிரியர் பயிற்றுநர் பாரதிதாசன் வரவேற்றார்.
இல்லம் தேடிக் கல்வி மைய ஆசிரியர் பயிற்றுநர் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அ.ரகமதுல்லா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர், இப்பயிற்சியில் தன்னார்வலர்களுக்கு தமிழில் எழுவாய், மரபு சொற்களை அறிவோம், ஆங்கிலம் குழுச் செயல்பாடுகள், கணக்கு,அறிவியல் செயல்பாடுகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
மேலும் தன்னார்வலர்கள் தினசரி வருகை பதிவை இல்லம் தேடிக் கல்வி செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் வலிறுத்தப்பட்டது, இப்பயிற்சியில் கருத்தாளராக தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி, ஆசிரியர்கள் தங்கராசு,ரவி, கண்ணன், அலெக்சாண்டர், சுகன்யா, அருண் வாலன்டின் ஆகியோர் செயல்பட்டனர், இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் சங்கிலி முத்து, ராஜேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.