கந்தர்வக்கோட்டை அருகே அரசு பள்ளியில் மந்திரமா! தந்திரமா! என்ற அறிவியல் விழிப்புணர்வு நிகழ்வு

கந்தர்வகோட்டை ஒன்றிய புனல்குளம், வெள்ளாள விடுதி அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மந்திரமா! தந்திரமா! என்ற அறிவியல் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் ரமேஷ் குமார் தலைமையில் தாங்கினார்.பட்டதாரி ஆசிரியர் வீராசாமி வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் வீரமுத்து ,மாவட்ட செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வை புதுக்கோட்டை அறிவியல் இயக்க மாவட்ட துணைத்தலைவர் சதாசிவம் அவர்கள் கையில் திருநீர் வரவழைத்தல், தேங்காய், மந்திரம்,சூடம் மந்திரம் போன்ற எண்ணற்ற தந்திரங்களை மந்திரங்களாக செய்து காட்டி மாணவர்களுக்கு அதன் மூலம் அறிவியல் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். 

இதில் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்று கரோனா தொற்றின் காரணமாக மன அழுத்தத்திலிருந்து மீளவும், கல்வி மீது ஆர்வம் ஏற்படுவதற்கும் தூண்டுகோலாக அமைந்தது. நிறைவாக ஆசிரியை சுப்புலட்சுமி நன்றி கூறினார்.இதுபோன்று வெள்ளாள விடுதி அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளியிலும் தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு மந்திரமா, தந்திரமா நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

78 + = 85