கந்தர்வகோட்டையில் பாரதிய ஜனதா கட்சி வர்த்தக பிரிவு மாநில தலைவர் ராஜ கண்ணன் அறிவுறுத்தலின் பேரில் மாநிலத் துணைத் தலைவர் வீரன் சுப்பையா வழிகாட்டுதலின்படியும், மாவட்ட தலைவர் பிரசாத் தலைமையில், மாவட்ட துணைத் தலைவர் பாண்டிதுரை முன்னிலையில் கந்தர்வகோட்டையில் தமிழக அரசின் மின்சார கட்டணம் உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டி கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள வர்த்தகர்களிடம் கடிதம் பெறப்பட்டது.முன்னதாக பாஜக வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் அய்யா. இளங்கோவன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்சியில்
கந்தர்வக்கோட்டை பாஜக வர்த்தக பிரிவு தலைவர் சுரேஷ், ஒன்றிய தலைவர் டி.ஆர்.தவமணி, மாவட்ட செயலாளர்கள் கங்கதரன், மதியழகன், மத்திய செயற்குழு உறுப்பினர் சந்திரன், வர்த்தக பிரிவு துணை தலைவர்கள் கார்த்தி, ரமேஷ், செந்தில், சரவணன், ராம்குமார் மற்றும் பாஜக ஒன்றிய, நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.