
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூட்டரங்கில் ஒன்றியக் குழுவின் மாதாந்திர சாதாரண கூட்டம் ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் துணைத்தலைவர் செந்தாமரை முன்னிலை வகித்தார், இந்த கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்,அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்று ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் உறுப்பினர்களுக்கு உறுதி அளித்தார், பின்னர் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதில் ஆணையர்கள் காமராஜ், நல்லதேவன், மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.