கந்தர்வகோட்டை வட்டாரத்தில் வேளாண்மை திட்டப் பணிகள் குறித்து ஸ்டாமின் இயக்குநர் ஆய்வு

கந்தர்வகோட்டை வட்டாரத்தில் கடந்த ஆண்டுகளில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டப்பணிகளை குடுமியான்மலை ஸ்டாமின் இயக்குநர் சங்கரலிங்கம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கந்தர்வகோட்டை வட்டாரத்தில் கடந்த 2021-22 ஆம்  ஆண்டில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சுந்தம்பட்டி ஊராட்சியில் தேர்வு செய்யப்பட்ட தரிசு நிலத்தொகுப்பினை குடுமியான்மலை ஸ்டாமின் இயக்குநர் சங்கரலிங்கம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தரிசு நிலத்தொகுப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள விவசாயிகளிடம் மாற்று பயிர் சாகுபடியின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தார்.

பின்னர்  காட்டுநாவல் கிராமத்தில் தமிழ்நாடு விவசாய நிலங்களின் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கத்தின் கீழ் சுப்ரமணியன் த\பெ சின்னச்சாமி என்பவரது வயலில் நடவு செய்யப்பட்டுள்ள தேக்கு, செம்மரம், வேங்கை ஆகியவைகளை ஆய்வு செய்தார்.

வடுகப்பட்டி, வீரடிப்பட்டி ஆகிய கிராமங்களில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் பயறு வகைகள் மற்றும் தென்னை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன கருவிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தென்னை மரங்களுக்கு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். ஆய்வில் கந்தர்வகோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் அன்பரசன், வேளாண்மை அலுவலர் எம்.ஜெயவேலன், உதவி விதை அலுவலர் நாகராஜன், உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கர், ரெகுநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

56 − = 51