கந்தர்வகோட்டை ஒன்றிய பெற்றோர்களால் பாராட்டப்படும் இல்லம் தேடிக் கல்வி திட்டம்

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில், இல்லம் தேடி கல்வித் திட்டம்  ஆடல், பாடல், விழாக்கள், கொண்டாட்டம் என சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் மற்றும் புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மஞ்சுளா ஆகியோர் வழிகாட்டுதலின் படியும், கந்தர்வகோட்டை வட்டாரக்கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி ஆலோசனையின் படியும் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஆண்டியபட்டி, நாட்டானி, தட்சங்குறிச்சி, சமுத்திரப்பட்டி கொல்லம்பட்டி, மற்றும் சுந்தம்பட்டி குடியிருப்புகளில் உள்ள இல்லம் தேடி கல்வி மையங்களை  ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் பார்வையிட்டு கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை உற்று நோக்கினர்.

தன்னார்வலர்கள் நாட்டாணி பாக்கியலட்சுமி, இலக்கியா, ஆண்டியபட்டி தீபா, திருமலைச்செல்வி, சமுத்திரப்பட்டி இளவரசி, தட்சங்குறிச்சி ஆரோக்கிய பிரதீபா, மரியலீனா, கொல்லம்பட்டி அகிலா, முருகேஸ்வரி  மற்றும் சுந்தம்பட்டி காஞ்சனா,பிரியா ஆகியோர் மூன்றாம் கட்ட கற்பித்தல் உபகரணங்களைக் கொண்டு தமிழ் மற்றும் ஆங்கில வாசிப்பு பயிற்சி,  எளிய  கணித செயல்பாடுகள் போன்றவற்றை உற்சாகத்தோடு கற்பித்து வருகின்றனர். 

பார்வையின் போது, ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் இ.தங்கராசு மற்றும்  அ.ரகமத்துல்லா ஆகியோர் தன்னார்வலர்களை பாராட்டியதுடன்,

தன்னார்வலர் – பெற்றோர் வாட்ஸ்அப் குழு உருவாக்கம், ஊக்கத்தொகை பெறப்பட்ட விவரம், மையங்களில் விழாக்கள் கொண்டாடப்பட்ட விவரம், பள்ளி மேலாண்மை குழு பங்கேற்பு மற்றும் பள்ளிகளில் உள்ள கற்பித்தல் வளங்களை பயன்படுத்துதல்  போன்ற விவரங்களைக் கேட்டறிந்தனர்.

மாணவர்கள் மாலை நேரத்தில் பயனடையும் வகையில் செயல்படுத்தப்படும் இல்லம் தேடி கல்வி திட்டம் பெற்றோர்கள் மத்தியில் பெரும்  பாராட்டைப் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 3 =