கந்தர்வகோட்டை ஒன்றிய குழு கூட்டத்தில் சாலையில் சுற்றும் கால்நடைகளை அப்புறப்படுத்த கோரிக்கை

கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் MRS.ரெத்தினவேல் கார்த்திக் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஒன்றிய குழு துணைத் தலைவர் செந்தாமரை வடிவேல் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜி.ஸ்ரீதரன் (கி. ஊ) , சி.நளினி (வ. ஊ), ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அலுவலர் பரமேஸ்வரி வரவு ,செலவு தாக்கல் செய்தார். அது ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. கூட்டத்தில் பேசிய கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் மா.ராஜேந்திரன் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை ஊராட்சி நிர்வாகம் பிடித்து கோசாலையில் அடைக்க வேண்டும் எனவும் , சுகாதார கேடு விளைவிக்கும் பன்றி, நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கோமாபுரம் ஒன்றியக் குழு உறுப்பினர் பு.பாண்டியன் பேசும்போது கோமாபுரம் ஊராட்சியில் மின் அலுவலகம் திட்டமிடப்படி திறக்க வேண்டும் எனவும், கந்தர்வகோட்டை ஊராட்சி நிர்வாகம் முறையாக செயல்பட வேண்டும் என்றும், மக்கள் நலனில் கந்தர்வகோட்டை ஊராட்சி அக்கறை காட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார். புதுநகர் ஒன்றியக் குழு உறுப்பினர், ஆர்.கலியபெருமாள் பேசும்போது கந்தர்வகோட்டை ஊராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தை பகிரங்கமாக ஏலம் விட்டு ஊராட்சிக்கு வருவாய் ஈட்ட வேண்டும் எனவும், தரை கடையை ஏலத்தில் கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பட்டுக்கோட்டை சாலை ஓரங்களில் உள்ள மீன் கடைகளை ஊராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் இப்பகுதியில் விற்கப்படும் மீன்களை சுகாதார துறை ஆய்வாளர்கள் சோதனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதற்கு பதில் அளித்து பேசிய ஒன்றிய குழுத் தலைவர் ஆர்.ரெத்தினவேல்கார்த்திக் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கேட்டுக்கொண்ட அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றப்படும் எனவும் , கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களை அழைத்து தகுந்த ஆலேசனை வழங்கும்படியும் கேட்டுகொண்டர்.

கூட்டத்தில் வட்டார துணை வளர்ச்சி அலுவலர் பார்த்திபன், தலைமை மருந்துவர் ராதிகா, புது நகர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் விண்ணரசி, சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார், வட்டார கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி, வேளாண் அலுவலர் அன்பரசன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பரிமளா கண்ணன், நதியா பழனிச்சாமி, வைரக்கண்ணு செல்வராஜ் , கோவிந்தராஜ் ,மலர் சின்னையன், பாரதி பிரியா அய்யாதுரை ,முருகேசன், சுதா ராஜேந்திரன், திருப்பதி மற்றும் அலுவலக கணக்கர் வீரடிப்பட்டி குமார் , ஊராட்சி ஒன்றிய அனைத்து துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

72 − = 68