கந்தர்வகோட்டை ஒன்றிய அரசு பள்ளிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டு

கந்தர்வகோட்டை அரசு பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை எடுத்த பள்ளி மாணவர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கி முன்னாள் மாணவர்கள் கௌரவித்தனர்.

கந்தர்வகோட்டை அரசு  ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோமாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, புதுநகர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் முறையே பத்தாம் வகுப்பு, 11ம் வகுப்பு, 12ஆம் வகுப்பு ஆகிய வகுப்புகளுக்கான சமீபத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பள்ளியில் முதல் மூன்று இடங்களை எடுத்த மாணவர்களை கந்தர்வகோட்டை முன்னாள் பள்ளி மாணவர் சங்கம் சார்பில் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி, பொன்னாடை போர்த்தி மாணவர், மாணவியர்களை கௌரவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் சங்கத்தினை சேர்ந்த எஸ். துரைப்பாண்டியன், தங்க.ரெசிதரன், அய்யா.இளங்கோவன், முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவர்களை பாராட்டினார். நிகழ்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இதே முன்னாள் மாணவர் சங்கத்தினர் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நவின நூலகம் அமைத்துக் கொடுத்து, பள்ளி மாணவர்களின் படிப்பிற்கு ஊக்கமளித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 82 = 84