கந்தர்வகோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அங்கன்வாடி கட்டிடங்களை சீரமைக்க ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஒன்றியக்குழு தலைவர் ஆர். ரத்தினவேல் கார்த்திக் தலைமையில், ஒன்றிய குழு துணைத் தலைவர் செந்தாமரை வடிவேல் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதரன், திலகவதி ஆகியோர் முன்னிலையில் ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் பார்த்திபன் வரவேற்று பேசினார். வரவு,செலவு கணக்கினை சிவரஞ்சனி வாசித்தார். கூட்டத்தில் பேசிய கோமாபுரம் ஒன்றியக்குழு உறுப்பினர், பு.பாண்டியன் புனல்குளம் மின் நிலையத்திலிருந்து முரட்டுசோழகம்பட்டி வரை செல்லும் மின்சார வயரினை புதிதாக மாற்றி இந்த பகுதிகளில் மின் தடை ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும், கோமாபுரத்தில் மின்சார அலுவலகத்தை உடனே திறக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

கந்தர்வகோட்டை ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.ராஜேந்திரன் பேசும்போது ஊராட்சிக்கு வருவாய் வரும் வகையில் ஊராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகளையும் உடனே காலி செய்து புதியதாக ஏலம் விடவேண்டும் எனவும், கந்தர்வகோட்டையில் தரை கடை மற்றும் கழிவறைகளை ஏலம் விட வேண்டும் என கேட்டுக்கொண்டார். புதுநகர் ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.கலியபெருமாள் பேசும்போது கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தை முறையாக பராமரிக்க வேண்டும், கழிவறையை தூய்மையாகவும் நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் கலந்துக்கொண்ட பெரும்பாலன உறுப்பினர் தங்கள் பகுதியில் உள்ள அரசு பள்ளி மற்றும் அங்கன்வாடி கட்டடங்கள் சிதிலமடைந்து, இடியும் நிலையில் உள்ளதாக போன கூட்டத்தில் வலியுறுத்தியதை மீண்டும் கூட்டத்தில் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த அலுவலர் அனைத்து பழுதடைந்த கட்டடங்களும் கணக்கெடுக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இறுதியாக பேசிய ஒன்றியக்குழு தலைவர் ஆர்.ரத்தினவேல்கார்த்திக் உறுப்பினர்கள் கோரிக்கை அனைத்தையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாரதிபிரியா, பரிமளா கண்ணன், நதியா பழனிச்சாமி, திருப்பதி . வைரக்கண்ணு, கோவிந்தராஜ் ,மலர் சின்னையா, முருகேசன், சுதா ராஜேந்திரன் மற்றும் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராதிகா, தீயணைப்பு நிலைய அலுவலர் ஆரோக்கியசாமி, வேளாண்மை உதவி இயக்குனர் அன்பரசன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். மேலும் கந்தர்வக்கோட்டை சுகாதாரதுறை ஆய்வாளர் முத்துக்குமார் பேசுகையில் கொரோனா தாக்கம் தற்போது அதிகரித்து வருவதால் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் எனவும் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளதாவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். கலந்து கொண்டனர். இறுதியாக கணக்கர் குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 3