கந்தர்வகோட்டை ஊராட்சியில் 17-வது ஒன்றிய குழு கூட்டம்

கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய குழுவின் 17-வது கூட்டம், ஒன்றிய குழு கூட்ட அரங்கில் ஒன்றியக் குழு தலைவர் ரெத்தினவேல் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நளினி, திலகவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலர் பரமேஸ்வரி வரவு ,செலவு கணக்கினை தாக்கல் செய்தார். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன் பேசுகையில், ஊரில் சுற்றி திரிந்து சுகாதார கேடு விளைவிக்கும் நாய் மற்றும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும், கோமாபுரம் ஒன்றிய குழு உறுப்பினர் பாண்டியன் பேசுகையில், வாண்டையன் பட்டி பிரிவு சாலை மற்றும் ஒன்றியத்தில் பல்வேறு சாலைகள் மிகவும் மோசமாக உள்ள நிலையில் அதனை சரி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

புதுநகர் ஒன்றிய குழு உறுப்பினர் கலியபெருமாள் பேசுகையில், கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் காது ,மூக்கு, தொண்டை மருத்துவ பிரிவு தனியாக செயல்பட வேண்டும் எனவும் தேசிய நெடுஞ்சாலை சாலை விளக்குகளை முறையாக பராமரித்து சாலையை தூய்மை செய்து தர வேண்டும் எனவும், பேருந்து நிலைய கட்டுமான பணியை உடனடியாக துரிதப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராதிகா பேசுகையில், கந்தர்வகோட்டை ஊராட்சியில் மருந்துவமனைக்கு இடம் ஒதுக்கி தர வேண்டும் எனவும் , மருத்துவமனை வளர்ச்சிக்காக சட்டப்பேரவை உறுப்பினர், ஒன்றிய குழு தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் இப்பகுதி மக்கள் முன்னின்று செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஒன்றிய குழு தலைவர் ரெத்தினவேல்கார்த்தி உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிதி ஆதாரத்தை கணக்கில் கொண்டு நிவர்த்தி செய்யப்படும் என்று பதில் அளித்தார். மேலும் கூட்டத்தில் அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 83 = 89