கந்தர்வகோட்டை அருகே விபத்து – கல்லூரி மாணவி பரிதாப பலி

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகில் உள்ள முதுகுளம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பன் மகள் மீனா சுந்தரி. கல்லூரி மாணவியான இவர் தஞ்சாவூர் அரசினர் குந்தவை நாச்சியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

வழக்கம்போல் இவர் இன்று தனது அண்ணன் கனகராஜ் உடன் இரண்டு சக்கர வாகனத்தில் தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வீரடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்பவருக்கு சொந்தமான சோளம் ஏற்றி வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக இரு சக்கர மோட்டார் வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்து முகம் சிதைந்த நிலையில் மீனா சுந்தரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது அண்ணன் கனகராஜ் படுகாயங்களுடன் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். டிராக்டர் ஓட்டுநர் தலைமறைவு ஆகிவிட்டார். இதுகுறித்து கந்தர்வகோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

38 + = 44