கந்தர்வகோட்டை அருகே மின்பாதை அமைக்க விவசாயிக்கு இழப்பீடு: மின் வாரியம் ஒப்புதல்

புதுக்கோட்டை மாவட்டம் கல்லூகாரன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நிலம் கந்தர்வகோட்டை உடையார் தெருவில் வசித்து வரும் தங்கராஜ் மகன் ராஜேந்திரனுக்கு சொந்தமாக உள்ளது. தற்சமயம் அந்த நிலத்தில் நெல் சாகுபடி செய்துள்ளார்.

இந்நிலையில், காரைக்குடி – புகளூர் மின்பாதையில் இருந்து கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வெள்ளாள விடுதி அருகே உள்ள பவர் ஹவுஸ்க்கு புதிய மின்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மின்பாதை அமைக்கும் தனியார் இடத்திற்கு மின்வாரியம் உரிய இழப்பீடு வழங்கி வருகிறது. இந்நிலையில், கந்தர்வகோட்டையில் வசிக்கும் ராஜேந்திரனுக்கு சொந்தமான இடத்தில் அமைய உள்ள மின் பாதை உயர் கோபுரத்திற்கு உரிய நிலத்திற்கு இழப்பீடு தராமல் இருந்தது.

இதுகுறித்து நேற்று திருக்கோகர்ணம் காவல் ஆய்வாளர் ரமேஷ், ஆதனக்கோட்டை உதவி காவல் ஆய்வாளர் தமிழ்செல்வன், கந்தர்வகோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா மற்றும் மின்வாரிய செயற்பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள், கிராம நிர்வாக அலுவலர் பேசி நில உரிமையாளர் பாதிக்காத வண்ணம் அவர் கேட்கும் நிவாரணம் வழங்க மின்வாரியம் ஒப்புக்கொண்டது. இதையடுத்து மின்பாதை அமைக்கும் பணி தொடங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 3