
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மல்லிகைநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கந்தர்வக்கோட்டை பாரத் ரோட்டரி சங்கத்தின் சார்பில் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைவர் தேவநாதன் தலைமை வகித்தார், புதுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பன்னீர் முன்னிலை வகித்தார்.
செயலாளர் ரவிச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார், ரோட்டரி முன்னாள் துணை ஆளுநர் சேவியர், முன்னாள் நிர்வாகிகள் சேவியர், சந்திர சேகரன், பரமசிவம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர், சீருடை பெற்றுக்கொண்ட மாணவர்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர், துளிர் திறனறிவுத் தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரத் தலைவர் ரகமதுல்லா கலந்து கொண்டு துளிர் திறனறிவுத் தேர்வு குறித்தும், அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள துளிர், ஜந்தர் மந்தர்,சிறகு உள்ளிட்ட இதழ்களை வாசிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.வார்டு உறுப்பினர் இளங்கோவன், இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர் ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், நிறைவாக பொருளார் தங்கப்பன் நன்றி கூறினார்.