புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வி இணை செயல்பாடுகளான யோகா, கராத்தே, சிலம்பம் வகுப்புகள் நடந்த திட்டமிட்டு அதன்படி யோகா வகுப்புகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது அதனை தொடர்ந்து சிலம்பம் பயிற்சி தொடங்கப்பட்டது. இத்தொடக்க விழாவில் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்து அனைவரையும் வரவேற்று பேசும் போது அக்கச்சிபட்டி பள்ளி மாணவர்களுக்கு கல்வி இணை செயல்பாடுகளில் சிலம்பம், யோகா, கராத்தே உள்ளிட்ட சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதற்கு தனியாக ஒரு பயிற்சியாளரை ஊராட்சி மன்றத் தலைவர் கங்காதரன் ஏற்பாடு செய்து மாலை வேளையில் தினந்தோறும் நடைபெற்று வருகிறது.
சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்றத் தலைவர் கங்காதரன் , தொழிலதிபர் விஜயராம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிலம்பம், யோகா, கராத்தே பயிற்சியினால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கி கூறினர், சிறப்பு பயிற்சி அளிக்கும் ஆசிரியர் முத்து பேசும்போது, சிலம்பம், யோகா, கராத்தே உள்ளிட்ட வகுப்புகள் தினந்தோறும் மாலையில் நடைபெற்று வருகிறது, தற்போது கராத்தே வகுப்புகள் முடிவடைந்து சிலம்பு வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகிறது. மாவட்ட, மாநில அளவிலான சிலபம், கராத்தே,யோகா உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று பேசினார்.
இந்நிகழ்வில் இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா , ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ஆனந்தராஜ், ஆசிரியர்கள் நிவின், செல்விஜாய் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர், நிறைவாக ஆசிரியர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.