
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சென்ற ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் மதிப்பெண்களை பெற்ற மாணவ,மாணவிகளுக்கு தனியார் அறக்கட்டளையின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த பரிசு வழங்கும் விழாவில் முன்னாள் தமிழக சிலை தடுப்பு பிரிவுத்துறை அதிகாரி பொன்மாணிக்கவேல் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார், இந்த நிகழ்விற்கு பள்ளியின் ஆசிரியை சஹீனா வரவேற்புரை ஆற்றினார், கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேலு பெண்கள் பள்ளி (பொறுப்பு) தலைமை ஆசிரியர் சசிகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆமினா இப்ராஹிம் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவரும் தொழிலதிபருமான சிராஜுதீன் முன்னிலை வகித்தார்,
விழாவில் பேசிய சிலைத் தடுப்பு துரை காவல் அதிகாரி பொன்மாணிக்கவேல் தொடர்ந்து 29 ஆண்டுகளாக மாணவ மாணவிகளுக்கு இந்த ஊக்கத் தொகையை தனது தாய்,தந்தையர் நினைவாக வழங்கி வருகின்ற அறக்கட்டளையின் நிர்வாகி சிராஜுதீனை இந்தத் தருணத்தில் நான் மனமாற பாராட்டுகிறேன் மேலும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்ற குற்றவாளிகளை தைரியத்தோடு காவல்துறைக்கு தெரியப்படுத்துகின்ற மாணவிகளுக்கு தனது சொந்த பணத்திலிருந்து பத்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்தார், மேலும் மாணவ மாணவிகள் படித்து முடித்தவுடன் ஏதாவது ஒரு அரசுப் பணியில் சேர்ந்து சம்பளம் வாங்கக்கூடிய நபராக இருக்கக் கூடாது அதைத் தாண்டி படித்தவர்கள் அதிக அளவில் பொதுப்பணிகளில் ஈடுபட வேண்டும் அந்த பொதுப் பணிகளை செய்வதற்கு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள வார்டு உறுப்பினர், கவுன்சிலர், சட்டமன்ற உறுப்பினர் ,எம்.பி அமைச்சர் முதலமைச்சர் போன்ற எண்ணற்ற பணிகள் இருக்கின்றன ஆகவே மாணவ மாணவிகள் தங்களை தூய்மையான அரசியல்வாதிகளாக மாற்றிக்கொண்டு பொதுப்பணிகளில் ஈடுபட முன்வர வேண்டும், முதலில் இந்த செயல்களை புரிவதற்கு நமக்கு தடையாக இருக்கின்ற தயக்கத்தையும், வெட்கத்தையும் அகற்ற வேண்டும், தனி மனித ஒழுக்கத்தை கடைபிடித்து ஆணுக்குப் பெண் சமம் என்ற உணர்வோடு பெண்கள் பயம் அறியாமல் நடை போட வேண்டும் அதேபோல் ஆசிரியர் பணி என்பது நல்ல சமுதாயத்தை உருவாக்குகின்ற பணி அந்தப் பணியை ஆசிரியர்கள் சிறப்பாக செய்ய வேண்டும் என்று பேசினார்.
விழாவில் மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது, நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் செந்தில்மாறன், பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை சப்னம், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் அகிலா சீனிவாசன், அறக்கட்டளையின் மேற்பார்வையாளர் சாகுல் ஹமீது, பெற்றோர்கள் இருபால் ஆசிரியர் பெருமக்கள், மாணவ மாணவியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர், முடிவில் பள்ளியின் ஆசிரியர் ஜெயக்குமார் நன்றி உரையாற்றினார் ஆசிரியர் பாரதிராஜா தொகுத்து வழங்கினார்.