கந்தர்வகோட்டை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம்

கந்தர்வகோட்டை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் புதுநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய ரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் அசோக ராஜன் தலைமை தாங்கினார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ரத்த வங்கியின் பேராசிரியர் வேல்முருகன் மற்றும் அவரது குழுவினர் முகாமினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் புதுநகர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சசிவர்மன், சுகாதார ஆய்வாளர்கள், முதல்வரின் நேர்முக உதவியாளர் சொக்கலிங்கம், பொருளாளர் ஆறுமுகம் ஆசாரி, துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இம் முகாமில் மொத்தம் 64 அலகுகள் ரத்தம் மாணவர்களால் தானமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் சையத்தளம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

46 − 45 =