புதுக்கோட்டை,கந்தர்வகோட்டை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளைமறுநாள் பவர் கட்

புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளைமறுநாள் மின் வினியோகம் இருக்காது என அந்தந்த பகுதி மின் வாரிய உதவி செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சையது அகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக புதுக்கோட்டை துணை மின் நிலையத்திலிருந்து பணிகள் நடைபெற இருப்பதால் மின்விநியோகம் செய்யப்படும் ராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர், லட்சுமி நகர், பாரி நகர், சிவகாமி ஆட்சி நகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராகோட்டை, நச்சாந்துபட்டி, நமணசமுத்திரம், கனக்கம்பட்டி, அம்மையப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேணா விலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய இடங்களில் நாளை மறுநாள் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 4 மணி வரை மீன் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் புனல்குளம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வில்சன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- புனல்குளம் தொகுப்பு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் புனல்குளம், தெத்துவாசல்பட்டி, மஞ்சபேட்டை, தச்சங்குறிச்சி, விராலிப்பட்டி, நத்தமாடிபட்டி, சோழகம்பட்டி, நொடியூர், கோமாபுரம், சமுத்திரப்பட்டி, கொத்தம்பட்டி, அரியாணிப்பட்டி, காடவராயன்பட்டி, புதுநகர், முதுகுளம் ஆகிய பகுதிகளுக்கும் குளத்தூர் நாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் குளத்தூர் நாயக்கர்பட்டி, நடுப்பட்டி, சேவியர் குடிக்காடு, ஆத்தகரைப்பட்டி, சாமிபட்டி, கீராத்தூர்,பருக்கைவிடுதி, குளத்தூர் ஆகிய பகுதிகளுக்கும் வியாழக்கிழமை டிசம்பர் 22ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றும் பொதுமக்கள் அதற்கேற்றார்போல் தங்களது பணிகளை மாற்றி அமைத்துக் கொள்ளுமாறும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 6